
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரே விதமான நோய்க்கு ஆளான இருபது நபர்களை மருத்துவர்கள் தேர்ந்தெடுத்தனர். அவர்களை சமமாக பிரித்து வெவ்வேறு இடங்களில் தங்க வைத்தனர். ஒரு பிரிவினருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்தாலும் கடுமையாக நடந்தனர். இதனால் மருத்துவரின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க கூட நோயாளிகள் விரும்பவில்லை.
மற்றொரு இடத்தில் தங்கிய நோயாளிகளுக்கு சாதாரண சிகிச்சை அளித்தாலும் அன்புடன் நடத்தினர். அதனால் அவர்கள் விரைவில் குணம் பெற்றனர். ஆனால் கடுமையாக நடந்த நோயாளிகளிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அன்புடன் நடத்தப்பட்ட நோயாளிகள் மனதிலும் உற்சாகம் அதிகரித்தது. அன்பு எதையும் சாதிக்கும்.