ADDED : ஜூன் 21, 2024 01:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார் ஒரு நபர். திடீரென ஒருநாள் வேலையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மனச்சோர்வுடன் வீட்டை நோக்கி நடந்தார்.
நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவரின் கண்களைக் கொண்டே புரிந்து கொண்டார் அவரது மனைவி. சில வெள்ளைத் தாள்களும், ஒரு பேனாவும் எடுத்துக் கொடுத்து, 'நீங்கள் உங்கள் மனதில் பட்டதை மறைக்காமல் சுதந்திரமாக எழுதுங்கள்' என உற்சாகப்படுத்தினார். அவரும் எழுதத் தொடங்கினார். அது தான் அமெரிக்க நாவல்களில் சிறந்ததாக போற்றப்பட்ட கருஞ்சிவப்பு எழுத்து(scarlet letter). இதை எழுதியவர் தான் பிரபல நாவலாசிரியர் நத்தானியேல் ஹாத்தார்ன்.