நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞர் ஒருவர் வீடெங்கும் அழகான ஓவியங்களை அடுக்கி வைத்திருந்தார். ஒருமுறை அவரை சந்திக்க அலுவல் விஷயமாக பெரியவர் ஒருவர் வீட்டுக்கு வந்தார்.
அவர் வந்த விஷயத்தை முடித்தபின் வரவேற்பறையில் இருக்கும் ஓவியங்களைக் காட்டி, 'குழந்தையை அணைக்கும் தாய், தோகை விரித்தாடும் மயில், அசைந்தாடும் யானை, ஓயாமல் அடிக்கும் அலை' என ஒவ்வொரு ஓவியத்தின் சிறப்புகளை சொன்னபடியே இளைஞர் காட்டினார்.
அதற்கு பெரியவரோ, 'பெற்றோரை அன்புடன் நீ நடத்துகிறாயா... இயற்கையை நேசிக்கிறாயா... செயற்கையான ஓவியத்தை பெருமையாகப் பேசுகிறாய். பெற்றோர், தோகை மயில், ஆடும் யானை, நீலக்கடல் எல்லாம் உயிருள்ள ஓவியமாக நிறைந்திருக்கின்றன. அதை பாதுகாப்பது நம் தலையாய கடமை'' என்றார்.