ADDED : நவ 24, 2015 09:23 AM

கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வது சில இடங்களில் வாடிக்கை. வீட்டுச்செலவு விஷயத்தில் கூட, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுவதுண்டு.
'இவர் வீட்டுக்கு தாமதமாக வருகிறாரே! குடிக்கிறாரோ! தகாத இடங்களுக்கு செல்கிறாரோ! இவரது உண்மையான சம்பளத்தை மறைக்கிறாரோ,'' என சந்தேகப்படும் பெண்கள் ஒருபுறம்.
'இவள் நாம் கொடுக்கும் பணத்தை தாய் வீட்டுக்கு கொடுக்கிறாளோ! நாம் இல்லாத நேரத்தில் இன்னொருவனுடன் பேசுகிறாளோ!'' இப்படி சந்தேகப்படுகின்றனர் சில ஆண்கள்.
இவர்கள் சந்தேகத்தால் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
'நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமாய் இருங்கள்'' என்கிறது பைபிள். சிலர், 'இவர் நம் கோரிக்கையை ஏற்பாரோ, மாட்டாரோ' என கடவுள் மீதே சந்தேகப்படுகிறார்கள். இப்படி, சந்தேகத்துடன் கடவுளிடம் ஜெபிப்பதால் பலனில்லை.
சந்தேகப்படாமல் கடவுளை விசுவாசித்தால் தான், அவரது ஆசிர்வாதம் கிடைக்கும்.