நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகனை அழைத்து கடைக்கு போகச் சொன்னார் தாய். அதை காதில் வாங்காமல் சென்ற அவனை அழைத்தார் தந்தை. அவனிடம் பானைக்குள் பெரிய வெள்ளரிக்காய் இருப்பதை காண்பித்தார். இது எப்படி பானைக்குள் சென்றது என அப்பாவியாக தந்தையிடம் கேட்டான்
அவன். அதற்கு அவரோ தோட்டத்திற்கு அழைத்துச் சென்று சிறு பிஞ்சான காயை காண்பித்து பானைக்குள் இட்டு வளரச் செய்தால் போதும். அது வளர்ந்தவுடன் அதை எடுக்க முடியாது. சிறு வயதில் தொற்றிக் கொள்ளும் தீய பழக்கமும் அப்படித்தான். தாய் சொல்வதை கேள். தீய பழக்கத்திற்கு வழி வகுக்கும் செயலை கைவிடு என்றார் தந்தை.