ஒரு நிறுவனத்தின் உயர்பதவிக்கு முந்நுாறு பேர் விண்ணப்பித்ததில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டார்கள். மூவருமே கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னார்கள். செய்வதறியாது திகைத்தார் ஒருங்கிணைப்பாளர்.
நிறுவனத்தின் இயக்குனர் மூவருக்கும் தனித்தனிஅறை ஒதுக்கி அதில் இன்று தங்க ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார். யார் வெற்றியாளர் என்பதை மறுநாள் அறிவிக்கிறேன் என்றார்.
மூன்றாவது அறையில் தங்கியவரே வெற்றியாளர் என்றார் இயக்குனர். மற்ற இருவரும் காரணம் கேட்டனர். அறைகளில் உள்ள துாசி, குப்பைகளை துாய்மைபடுத்த உதவியாளரை அணுகினீர்கள். அறைக்கு தண்ணீர் வரும் குழாயை அடைத்திருந்தோம். தண்ணீருக்காக நீங்கள் இருவருமே மேலாளருக்கு போன் செய்தீர்கள். ஆனால் வெற்றியாளரோ அனைத்து வேலைகளையும் அவரே செய்தார். இப்போது புரியும் என நினைக்கிறேன் இருந்தாலும் எங்களது துணை நிறுவனத்தில் உங்களுக்கான பணி காத்திருக்கிறது என்றார் இயக்குனர்.