
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜானுக்கு கிரிக்கெட் பேட் வாங்க ஆசை. அம்மாவிடம் கேட்டதற்கு அப்பா கொடுக்கும் காசை சேர்த்து வைத்து வாங்கிக்கொள் என சொல்லிவிட்டாள். சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்கு போனான். அங்கே கூட்டமாக
இருந்தது. ஒரு பெரியவர் மயங்கி கிடந்தார். சுற்றி நின்றவர்கள் தண்ணீர் கொண்டு வாருங்கள். சாப்பாடு வாங்கித்தாருங்கள். என சொன்னார்களே தவிர யாரும் அதற்கு தயாராக இல்லை. அதைக்கேட்ட இவன் அருகில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில், ரொட்டி வாங்கி வந்து கொடுத்தான். மீதம் இருக்கும் சில்லறைகளை எண்ணி கூட பார்க்காமல் அவருக்கு கொடுத்து விட்டு நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுங்கள் என சொன்னான். கூட இருந்த நண்பனோ உன் ஆசை என்னவாயிற்று என கேட்க, அடுத்த முறை வாங்கி கொள்ளலாம் என உற்சாகம் குறையாமல் பதில் சொன்னான். கூட்டத்தில் ஒருவர் இவனது செய்கையை பார்த்து ''உற்சாகமாக இருப்பவர் தேவனுக்கு பிரியமாய் இருப்பார்''என சொல்லியது அவனது காதில் கேட்டது.