ADDED : பிப் 19, 2023 01:27 PM

பிறரை குறைக் கூறும் பழக்கத்தை கொண்டவர் கிறிஸ்டோபர். வருந்திய தந்தை இவரை அழைத்து, ''ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து வை. பின் அதை நீ போகும் வழியில் சிதறிக் கொண்டே போ'' என்றார். அவரும் அப்படியே செய்தார். வீட்டிற்கு வந்தவரிடம், “மகனே. இப்போது உடனே கிளம்பு. நீ சிந்திய இறக்கைகளைப் மீண்டு பையில் எடுத்துக்கொண்டு வா'' என்றார். அவரும் வேண்டா வெறுப்பாக அங்கிருந்து கிளம்பினார். பின் சாலையில் எங்கு தேடியும் இறக்கைகள் காணவில்லை. அவை காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. வீட்டிற்கு வந்தவர் நடந்ததை கூறினார்.
''உன் வார்த்தைகளும் அப்படித்தான். வார்த்தைகளைச் சிந்தினால் பொறுக்கவே முடியாது. இனியாவது யோசித்துப் பேசு” என்றார்.
'மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும், தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்' என்கிறது பைபிள்.