
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்குள் வந்த பவுல் அதில் முழுமையாக ஈடுபடவில்லை. வீட்டில் நடந்த சம்பவங்கள் அவரது கண் முன் நிழலாடியது. சாப்பாட்டில் உப்பு இல்லை என மனைவியிடம் கோபப்பட்டது. மாத்திரை வாங்கி கொடு என்ற தந்தையின் சொல் கேளாதது. அடுத்த தெருவில் வசிக்கும் அத்தைக்கு சாப்பாடு கொடு
என தாய் சொன்ன போது ,'வேற வேலை இல்லையா' என கடும் வார்த்தைகளை உதிர்த்தது. பூங்காவிற்கு போகலாமா என கேட்ட குழந்தையை முறைத்தது.
அண்ணா என அழைத்தும் தங்கையின் வார்த்தையை காதில் வாங்காதது
என்ற செயல்கள் யாவும் அவனை பிரார்த்தனையில் ஈடுபட வைக்கவில்லை என்பதை உணர்ந்தான்.
வாழ்நாள் முழுவதும் நம்மை விட்டு பிரியாத கோபம், அலட்சியம், திமிர் போன்றவை உடன் இருக்கத்தான் செய்யும். அவற்றை நெறிபடுத்தி நிம்மதியாக வாழுங்கள்.