ADDED : அக் 06, 2023 03:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலையின் உச்சியை நோக்கி ஒரு பெரியவர் நடக்க ஆரம்பித்தார். களைப்பால் ஒருமர நிழலில் ஒதுங்கினார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவன், ''குளிர்காலமான இப்போது மலை மீதேறி ஏன் துன்பப்படுகிறீர்கள்'' எனக் கேட்டான். அதற்கு அவரோ, '' நான் உள்ளத்தால் எப்போதோ மலை உச்சிக்குப் போய் விட்டேன். என் உடல் மட்டும் தான் இப்போது மலை ஏறுகிறது'' என்றார்.
எண்ணத்தில் இளமை இருந்தால் முதுமையிலும் இன்பமாக வாழலாம்.