ADDED : ஜூலை 31, 2023 12:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டம் டோனாவூரில் வாழ்ந்தவர் ஏமி கார்மைக்கேல். இவரை பார்க்க வந்தார் நண்பரான பில்லி கிரஹாம் 20 வருடமாக படுத்தபடுக்கையாக இருக்கிறீர்களே எப்படி உங்களால் மட்டும் இவ்வாறு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்ய முடிகிறது என கேட்டார். அதற்கு அவர் 'ஒவ்வொரு நிமிடத்தையும் புத்தகம் எழுதுவதற்காக செலவிடுகிறேன்.
என்னை பார்க்க வருபவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்களுக்கு ஆலோசனையும் கொடுக்கிறேன். ஒரு நிமிடத்தை கூட வீணாக்குவதில்லை' என்றார் அவர். காலம் பொன் போன்றது என்றும், கடமை கண் போன்றது என்றும் இதை தான் பெரியவர்கள் சொன்னார்கள்.