
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதபோதகர் ஒருவர் டெய்லர் வேலை செய்து வந்தார். அவரைப் பற்றி இரண்டு தோழிகள் பேசிக் கொண்டிருந்த போது 'அவருடைய சாதனைக்காக அவர் பெருமைப் பட்டிருப்பாரா' என வாதிட்டனர். நமக்குள் ஏன் இந்த விவாதம் அவர் மனைவியிடமே கேட்டு விடலாம் என அவர் வீட்டிற்கு சென்றனர். அதற்கு பதில் சொல்லாத மனைவி அவரிடமே கேளுங்கள் என சொன்னார். பெருமைப்படும் படியாக எதையும் நான் செய்யவில்லை என தன்னடக்கத்துடன் கூறினார் டெய்லர்.
செய்ய வேண்டிய செயல்களை ஒழுங்காக செய்தாலே போதும். பெருமை தானாக தேடி வரும் என்கிறது பைபிள் என சொன்ன போது அவரது பெருமைக்கான காரணம் அவர்களுக்கு நன்கு புரிந்தது.