ADDED : அக் 11, 2021 03:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் விவசாயநிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார் ஒரு விவசாயி. அருகில் உள்ள கிணற்றை வாங்கி நீரை பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்பட்டது.
''உனக்கு கிணற்றை மட்டும்தான் விற்றுள்ளேன். அதில் உள்ள நீரை அல்ல'' என்று கிணற்று உரிமையாளர் கூறினார்.
இது குறித்து அரசரிடம் முறையிட்டார் விவசாயி. அவர் விசாரித்ததில், கிணற்று உரிமையாளர் தந்திரமானவர் என்பதை புரிந்து கொண்டார்.
''கிணற்று உரிமையாளரே! நீங்கள் சொல்வது நியாயம்தான். எனவே நீரை காலி செய்துவிட்டு வெறும் கிணற்றை விவசாயியிடம் ஒப்படையுங்கள்'' என்று தீர்ப்பு வழங்கினார் அரசர்.
இதைக்கேட்டதும் கிணற்று உரிமையாளளுக்கு திடுக்கிட்டது. தவறை ஒப்புக்கொண்ட அவர் விவசாயியிடம் மன்னிப்பு கேட்டார்.
பிறரை ஏமாற்றினால் அதற்குரிய பலனை அனுபவிப்பீர்கள்.