/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
கைக்கு எட்டியது.. வாய்க்கு எட்டவில்லை...
/
கைக்கு எட்டியது.. வாய்க்கு எட்டவில்லை...
ADDED : அக் 11, 2021 02:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசர் ஒருவர் தன் படைத்தளபதிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அரசர் வந்திருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும் ஒருவரும் வராததால், அரசர் உணவருந்த தயாரானார். அரசர் சாப்பிட்டு முடித்தவுடன் படைத்தளபதிகள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர்.
''உணவு நேரம் முடிந்துவிட்டது.
இது பணி நேரம் உடனே பணிக்கு செல்வோம்'' என அவர்களிடம் கூறினார்.
நேரத்திற்கு வராததால், கைக்கு எட்டிய உணவு வாய்க்கு எட்டவில்லையே என வருந்தினர்
தளபதிகள். எதையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிங்கள்.