
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியரிடம் 'ஓரிடத்தில் நிலைத்து நிற்பது எப்படி' என கேட்டான் அந்த துடுக்கான மாணவன். அவரோ ''கூட்டமாக முளைத்த காளான்களில் ஒன்று என்னைப்பார். என்வளர்ச்சியை பார் என சொல்லி ஆல விதையை கோபப்படுத்தியது. காதில் வாங்காமல் இருந்தது ஆல விதை.
அங்கே மேய்ச்சலுக்கு வந்த ஆடு மாடுகளின் கால் பட்டு சிதைந்தன காளான் கூட்டம்.
ஆல விதை துளிர் விட்டு செடியான போது அங்கு ஒரு காளானையும் காணவில்லை. நிலைத்து நிற்க வேண்டும்'' என விரும்பினால் பொறுமை அவசியம். விமர்சனங்களை கண்டு கொள்ளக்கூடாது என அவனிடம் விளக்கினார் ஆசிரியர்.