ADDED : ஏப் 06, 2023 12:12 PM

தன்கட்டுப்பாட்டில் உள்ள சிற்றரசரை விருந்திற்கு அழைத்தார் பேரரசர். உபசரிப்பு முடிந்ததும் அரண்மனைக்குள் இருந்த தோட்டத்தை பார்வையிடச் சென்றார் சிற்றரசர்.
அங்கிருந்த பூந்தோட்டம் மிகவும் அழகாக இருந்தது. அதன் நடுவே இருந்த குடிசை ஒன்றை கண்ட சிற்றரசர் இது தோட்டத்தின் அழகிற்கு குறைவினை ஏற்படுத்துகிறதே என கேட்டார். அதற்கு ''என் தந்தை காலத்தில் பணியாற்றிய படைத்தளபதியின் திறமைக்கு கொடுத்த இடம் அது. அதில் அவருடைய மகள் வசிக்கிறார்.
அவரிடம் இதை விட நல்ல வசதியான இடத்தில் வீடு கட்டித்தருகிறேன் என சொல்லியபோது அவர் அடக்கமாக மறுத்து விட்டார். இருக்கும் இடத்தில் தாங்கள் மாதம் தோறும் கொடுக்கும் உதவித்தொகையால் நிம்மதியாக வசித்து வருகிறேன். எனக்கு இவ்விடமே போதும்'' என சொன்னார் என்றார் பேரரசர். போதும் என்கிற மனதுடன் அவரவர் இருக்கும் இடத்தில் இருப்பது நல்லது என்கிறது பைபிள்.