ADDED : ஏப் 06, 2023 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏவானிடம் குடும்பத்துடன் நீ மட்டும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாயே அது எப்படி என கேட்டார் சக பணியாளர்களில் ஒருவர்.
அதற்கு அவரோ மூன்று விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டேன் என்றான். அது என்னது என கேட்க ''யாரையும் வேண்டுமென்றே விமர்சிப்பது, தேவையில்லாமல் மற்றவருக்கு கட்டளை இடுவது, பணியிடத்தில் அதிகமான பணத்தை எதிர்பார்ப்பது'' இவற்றை ஒரு போதும் நான் செய்தது கிடையாது என்றான்.
அது சரி இவற்றை எப்படி உன்னால் சரியாக கடைபிடிக்க முடிகிறது என கேட்டார் அவர்.
எனது தந்தை தான் இதற்கு காரணம். அவர் சொன்ன அறிவுரைப்படி இந்த மூன்றையும் கடைபிடிப்பதால் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான் ஏவான்.