
ஆற்றங்கரையோரத்தில் ஆலமரக்கன்றிற்கு தாங்கலாக குச்சி ஒன்றை நட்டுவித்து அதனை சுற்றி வேலி அமைத்து அது வளர்வதற்கான சூழலை உருவாக்கினார் பெரியவர் ஒருவர்.
இதை கண்ட காட்டுச்செடியானது 'ஏ ஆலங்கன்றே என்னை பார்த்தாயா. நான் எவ்வளவு சுதந்திரத்துடன் வளர்கிறேன். என்னை போல கட்டுப்பாடு இல்லாமல் வாழ கற்றுக் கொள்' என்றது. அதைக்கேட்ட ஆலங்கன்று பெரியவர் மீது எரிச்சலும் கோபமும் பட்டது. மறுநாள் ஆலங்கன்றை மட்டும் விட்டுவிட்டு அங்கிருந்த காட்டுச்செடிகளை புல்டோசர் வைத்து அகற்றிக் கொண்டிருந்தனர் சிலர். அவர்களிடம் 'இதை மட்டும் விட்டுவிட சொன்னீர்களே ஏன்' எனக் கேட்டனர். அதற்கு அவரோ 'இது வளர்ந்து பெரிதாகும் போது நிறைய பறவைகள், பயணியர் பலரும் வந்து தங்குவர். நீங்கள் கட்டும் பெரிய ஓட்டலுக்கு முன் அழகாக இருக்குமே' என்றார் பெரியவர். பொறுமையாக இருந்தால் எல்லோருக்கும் பயன்படலாம் என்பதை உணர்ந்தது ஆலங்கன்று.