
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கப்பல் ஒன்று கிளம்பத் தயாராக இருந்தது. பயணிகளின் உறவினர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வழியனுப்ப காத்திருந்தனர். சிலர் பிரிவுத் துன்பத்தை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டனர். ஆனால் கப்பலில் இருந்த ஜான் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். காரணம் அவருக்கு உறவுகள் யாருமில்லை. 'நம்மிடம் அன்பு காட்ட மனிதர்கள் இல்லையே' என வருந்தினார். இதை கவனித்த சிறுவன், அவரைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான். அவ்வளவுதான். அவரது முகத்தில் கவலை மறைந்து, மகிழ்ச்சி பெருகியது. எல்லோரிடமும் அன்பாக இருந்தால், எங்கும் மகிழ்ச்சி பரவும்.