ADDED : ஜன 31, 2023 10:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் ஒருவர் சந்தோஷமாக படுத்திருந்தார். அவரைப் பார்க்க வந்த ஒருவர், ''ஐயா. உங்களுக்கு எத்தனை வயதாகிறது?'' எனக் கேட்டார். அதற்கு அவர் சிரித்த முகத்தோடு, ''நான் இப்போது எண்பதாவது வயதின் இனிய பகுதியில் இருக்கிறேன்'' என சொன்னார். 'எண்பதாவது வயது. ஒரு இனிய பகுதியா' என யோசித்தார் வந்தவர்.
அவருடைய முகக்குறிப்பை அறிந்த முதியவர், ''வயது ஆக ஆக என் கால்கள் தள்ளாடுகின்றன. கண்கள் மங்குகின்றன. என்னுடைய பலமும் குறைகின்றன. ஆனால் நான் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். அதாவது என் மனம் அமைதியாக மாறுகின்றது. அதுவும் எந்தவித கூச்சலும் இல்லாத பேரமைதி'' என்றார்.
முதுமைப்பருவம் என்பது பூங்காற்று வீசும் தருணம். அப்போது நல்ல சிந்தனைகளுடன் இருந்தால், மனம் லேசாகும்.