ADDED : மார் 14, 2023 12:30 PM

மக்கள் சிலர் குறிப்பிட்ட நாட்களுக்குள் புதிய சர்ச் ஒன்றை எழுப்பினர். ஆனால் அங்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கும், நடைபாதைக்கும் இடம் இல்லாததால் திறக்கும் நாளை தள்ளி வைத்தனர்.
சர்ச்சின் அருகே இருந்த சிறுமலையை உடைத்து எடுத்தால் இடம் கிடைக்கும் என்பதை அறிந்தார் தலைமை நிர்வாகி. அன்று மாலை மலையை நகர்த்த பிரார்த்தனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். அதன்படியே கலந்து கொண்டோர் நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல தயாரானர். அப்போது நிர்வாகியிடம் சிலர் அறிமுகப்படுத்திக் கொண்டு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வருகிறோம் எங்களுக்கு அன்னதானக்கூடம் கட்டுவதற்கு நிறைய கற்கள் தேவை. தற்போது
அதனை வெளியிடத்தில் இருந்து கொண்டு வர அவகாசம் இல்லை. தங்களது சர்ச்சின் அருகில் இருக்கும் சிறு மலையை உடைத்து எடுத்தால் எங்களுக்கான கற்கள் கிடைக்கும். நீங்கள் அனுமதி தாருங்கள். அதற்கு பதிலாக சர்ச்சிற்கான பாதையை அகலப்படுத்தி சரி செய்து தருகிறோம் என்றனர். மக்களை பார்த்த நிர்வாகி, 'நம்பிக்கையிருந்தால் மலையை கூட நகர்த்தலாம்' என கண்களால்
சொல்வது பிரார்த்தனையில் கலந்து கொண்டோருக்கு புரிந்தது. குறித்த நாளில் சர்ச்சும் திறக்கப்பட்டது.