
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு... என்கிற பாடல் அந்தோணி காதில் ஒலித்தது. அப்போது சிறு வயதில் ஆசிரியர் நடத்திய பாடம் நினைவுக்கு வந்தது. ரோம பேரரசர் தன் தளபதிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எந்தெந்த நாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் எனக் கேட்டார். அதற்கு அவர்களோ சிசிலீ, எகிப்து, காங்கோ, கிரீஸ், மக்கதோனியா என நாட்டின் பெயர்களை வரிசைப்படுத்தினர். அதைக்கேட்ட அவர் அதன் பிறகு என்ன செய்யலாம் எனக்கேட்டார். குடும்பத்துடன் இன்பமாக வாழலாம் என்றனர். அதை இப்போதே செய்யலாமே ஏன் மக்களை போர் என்ற பெயரில் கொன்று குவித்து விட்டு வாழ்வதை விட அதை நிகழ்த்தாமல் இப்போதே இன்பமாக இருக்கலாம் அல்லவா என்றார் பேரரசர். ஆமாம் என அனைவரும் ஒரு மனதாக சரி என்றனர். அதிக பேராசை கூடாது என்கிற ஆசிரியரின் உபதேசம் அந்தோணிக்கு மதுரமாக இனித்தது.