ADDED : டிச 14, 2022 11:45 AM

அ நிறம் | அளவு
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். இவருக்கு அறிஞர்கள் பலர் நண்பர்களாக இருந்தனர். அதில் ஒருவர்தான் 92 வயதான நீதிபதி ேஹாம்ஸ். ஒருநாள் அவரை சந்திக்க ரூஸ்வெல்ட் சென்றார். அப்போது அவர் சாக்ரடீஸ் எழுதிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டவர், ''நீதிபதி அவர்களே...
இந்த வயதிலும் ஏன் படித்து கொண்டிருக்கிறீர்கள்'' என்று கேட்டார்.
''என் அறிவை விருத்தி செய்ய படிக்கிறேன். அறிவிற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை'' என்றார். அந்த வயதிலும் அவரது அறிவுத் தாகத்தை அறிந்து வியந்தார் ரூஸ்வெல்ட்.
