ADDED : டிச 19, 2022 12:33 PM

அ நிறம் | அளவு
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் தத்துவ ஞானியான பெர்ட்ரண்டு ரசல். இவர் எப்போதும் அமைதியை விரும்பும் குணம் கொண்டவர். ஒருமுறை வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது சுங்கப் பரிசோதனை அதிகாரிகள் சிலர், அவரிடம் திமிராக நடந்து கொண்டனர்.
''விலை மதிப்புள்ள பொருட்கள் உங்களிடம் என்னென்ன உள்ளன. காட்டுங்கள்'' என்று அதட்டினர். அதற்கு அவர் சிறிதும் கோபப்படாமல், ''என்னிடம் இருக்கும் விலை மதிப்புள்ள ஒரே பொருள் எனது அறிவுதான். அதை நீங்கள் பறிமுதல் செய்ய முடியாது'' என்று புன்னகைத்தார். அதிகாரிகள் அவமானத்தால் தலைகுனிந்து நின்றனர்.
