நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர் டேனியல். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட யோவான், ''வறுமையில் வாடும் என் குடும்பத்தை வாழச் செய்யுங்கள்'' என அழுதார்.
டேனியல் சற்றும் யோசிக்காமல் தன் கையில் இருந்த தொகையை கொடுத்தார். அதையே மூலதனமாக வைத்து உழைத்த யோவான் பணக்காரர் ஆனார். ஆனால் டேனியல் வாழ்க்கையோ தலைகீழாக மாறியது. ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் டேனியலைச் சந்தித்த யோவான் கூச்சத்துடன் ஒதுங்கினார். ''தாங்கள் கொடுத்த பணத்தால் நான் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளேன். என் உதவியை ஏற்க மறுக்காதீர்கள்'' என பெருந்தொகையை அளித்தார்.
சிறிய உதவி பெரிய செயலை வரவழைக்கும் என்கிறது பைபிள்.