
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணியாளர்கள் சிலர் தடியை வண்டியில் ஏற்ற போராடினர். அவர்களை கண்காணித்தபடி இருந்தார் முதியவர் ஒருவர். அவ்வழியாக குதிரையில் வந்த வீரன் ஒருவன், இதைக் கண்டதும் இறங்கி தோள் கொடுத்தான். தடியை ஏற்றியதும் மின்னல் வேகத்தில் குதிரையில் பறந்தான். முதியவருக்கோ அந்த வீரனை எங்கேயோ பார்த்ததாக ஞாபகம்.
இந்த நிகழ்வு நடந்த மறுநாளன்று ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சென்ற போது ஆச்சரியம் காத்திருந்தது. ஜனாதிபதியாக பதவியேற்ற வாஷிங்டன் தான் அந்த குதிரைவீரன் என்பது புரிந்தது. பணிவு கொண்டவரே சிறந்த மனிதர்.