ADDED : நவ 28, 2022 01:46 PM

அ நிறம் | அளவு
மாவீரர் அலெக்சாண்டர் முன்பு கடல் கொள்ளைக்காரன் ஒருவன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான். அவனிடம், ''ஏன் இப்படி மக்களுக்கு சிரமத்தை தருகிறாய். இந்த துணிச்சல் உனக்கு யார் கொடுத்தது'' எனக்கேட்டார் அலெக்சாண்டர்.
''உங்களிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்'' என்றான்.
''நான் இதற்கு முன் உன்னை பார்த்தது கூட கிடையாது. பிறகு ஏன் இப்படி பொய் சொல்கிறாய்'' எனக்கேட்டார்.
''உண்மையைத் தான் சொல்கிறேன். நான் கப்பலில் சென்று கொள்ளையடிப்பதால் என்னை கடல் கொள்ளைக்காரன் என சொல்கின்றனர். நீங்களோ படையுடன் பிற நாட்டிற்கு சென்று கொள்ளையடிப்பதால், மக்கள் பயத்தில் உங்களை மாவீரன் என கொண்டாடுகின்றனர். இதுதான் மனிதனின் மனநிலை'' என சிரித்தான்.
இதைக்கேட்டவர்கள் வாயடைத்து போனார்கள்.
