ADDED : நவ 28, 2022 01:48 PM

அ நிறம் | அளவு
ஒரு வீட்டின் கிணற்றில் சில மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. கோடை காலம் வந்தது. கிணற்றில் நீர் வற்ற ஆரம்பித்தது. இதை கவனித்த அந்த வீட்டு சிறுமி, மீன்களை பிடித்து வீட்டில் உள்ள தொட்டியில் இட்டாள். அவை புத்துயிர் பெற்றன. மீன்களைக் காப்பாற்றியதால் அவளது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. சில நாட்களில் கோடை மழை ஆரம்பித்தது. இதனால் கிணற்றில் நீர் மட்டமும் உயர்ந்தது. மீண்டும் மீன்களை கிணற்றுக்குள் விட்டாள்.
பார்த்தீர்களா... நாமும் இப்படித்தான். வெயில் என்னும் துன்பம் சுட்டெரிக்கும்போது மீன்கள் போல துடித்துப் போகிறோம். பின் மழை என்னும் மகிழ்ச்சி வந்ததும் துள்ளிவிளையாடுகிறோம். எனவே கோடை என்னும் துன்பம் வருவதற்கு முன் நல்ல செயல்களை செய்வோம். அதுவே குடையாக இருந்து நம்மை காப்பாற்றும்.
