ADDED : டிச 02, 2022 01:50 PM

அ நிறம் | அளவு
தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவனை பாம்பு தீண்டியது. இதனால் கோபப்பட்ட அவனது தந்தை பாம்பை தேடிச் சென்றார். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. இதைப்பார்த்த ஒருவர், ''ஏனப்பா... அதைத்தேடி நேரத்தை வீணடிக்கிறாய். போய் வேலையைப்பார்'' என்றார்.
''என் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். அதைக்கொன்றால்தான் எனது கோபம் தீரும்'' என ஆவேசப்பட்டார்.
''என்னப்பா... நீ புரியாமல் பேசுகிறாய். பாம்பு என்றால் தீண்டத்தான் செய்யும். அதுதான் அதோடு இயல்பு. அதற்காக பழி வாங்கத் துடிப்பது நியாயமா'' எனக்கேட்டார்.
பார்த்தீர்களா... இந்த பாம்பைப்போல் பல மனிதர்களிடம் கெட்ட குணம் உள்ளது. இவர்களிடம் வீணாக வாதம் செய்தால் நேரம்தான் வீணாகும். எனவே ஒருவரது இயல்பை புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்னையே வராது.
