ADDED : ஜன 26, 2022 03:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்சு நாட்டின் அரசராக இருந்தவர் நெப்போலியன். ஒருநாள் இரவு அரண்மனையின் மேல்மாடத்தில் உலாவிக் கொண்டிக்கும்போது, காவல் வீரன் ஒருவன் துாங்குவதை பார்த்தார். அப்போது அங்கு வந்த தளபதியும் அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டார்.
''அரசே.. காவல்புரியும் வீரன் துாங்குவது பெரிய குற்றமாகும். அவன் கடமையை அலட்சியப்படுத்துகிறான். அவனுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்'' என்றார் தளபதி.
''தளபதி அவர்களே... அவன் கடமையை அலட்சியப்படுத்தவில்லை. அவன் அதிகமாக உழைத்திருப்பதால், உடல் சோர்ந்து துாக்கம் வந்துவிட்டது. துாக்கம் என்பது இயற்கைதானே. துாங்கட்டும் விடுங்கள்'' என்று சொல்லி நடந்தார்.
'நெப்போலியன் கடமைக்கும், கண்டிப்புக்கும் பெயர் போனவராக இருந்தாலும், மனிதாபிமான உணர்வுடன் இருக்கிறாரே' என எண்ணி வியந்தார் தளபதி.