ADDED : ஜன 26, 2022 03:52 PM

மூன்றாம் ஃபிரடெரிக் வில்லியம் பிரஷ்யாவின் அரசராக இருந்தார். அவர் பல யுத்தங்களை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கருவூலத்தில் பணம் இல்லை. அதேசமயம் எதிரிகளின் ஆதரவையும் பெற விரும்பவில்லை. எனவே தன் நாட்டின் பெண்களிடம் உள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களோடு வரச்சொன்னார். அவர்களும் நாட்டின் மீதுள்ள அன்பால் கொண்டுவந்தனர். அதற்கு ஈடாக இரும்பு, வெண்கலத்தில் செய்யப்பட்ட நகைகளை கொடுத்தார் வில்லியம்.
''என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். ஆனால் எப்படி எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் கேட்டதும் கொண்டு வந்துவிட்டீர்கள்'' என ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர்.
கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ''அரசே.. செல்வத்தின் மதிப்பு என்பது நம்மிடம் உள்ள அளவை பொறுத்தது அல்ல. அதை எப்படி அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது'' என்றார்.
செல்வத்தை பிறருக்கு கொடுத்தால்தான் அதன் பயன் பெருகும். அதில்தான் திருப்தியும் இருக்கும். இப்படி நீங்களும் பிறருக்கு உதவி செய்து பணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றலாமே!