ADDED : ஜூலை 14, 2023 11:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உணவை தயாரித்து முடித்தாள் மேரி. அவளது தந்தை ஜோசப் அக்கம் பக்கத்தினரை சாப்பிட அழைத்து வா என அவளிடம் சொன்னார். வெளியே வந்து அவள் வீடு தீப்பற்றி எரிகிறது அணைக்க வாருங்கள் என வேண்டுமென்றே கத்தினாள். அதைக் கேட்டு சிலரே ஓடி வந்தனர். அவர்களுக்கு மட்டும் உணவை பரிமாறினாள் மேரி.
அதைப் பார்த்த ஜோசப் 'என் நண்பர்கள் யாரும் வரவில்லையா' என கேட்டார். அதற்கு அவள் ' உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் நண்பராக முடியாது' என்றாள். அதை கேட்டு அவர் அமைதியானார்.