ADDED : டிச 14, 2022 11:43 AM

அ நிறம் | அளவு
வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் டால்ட்டன். பிறரது கஷ்டம் தனக்கு தெரியும் என்பதால் ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். இதை அறிந்த பலர் தினமும் அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். அவரால் அன்றாட பணிகளை கூட செய்ய முடியவில்லை. ஒருகட்டத்தில் கோபப்பட்ட அவர், உதவி கேட்டு வருபவர்களை விரட்டினார். அன்று இரவு அவரது கனவில், 'மகனே! நீ கனி தரும் மரமாக வளர்ந்துள்ளாய். பறவைகளுக்கு கனி தருவது உன் கடமை அல்லவா!' என்றது ஒரு குரல். உடனே துாக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
