ADDED : டிச 14, 2022 11:42 AM

அ நிறம் | அளவு
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். இவர் ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ''இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்'' என்று கூறினார். இதற்கு அவையில் உள்ளவர்கள், 'மன்னிப்பு கேளுங்கள்' என்று கூச்சலிட்டனர். இதற்கு சர்ச்சில், ''மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தவறாக சொல்லிவிட்டேன். இங்கே இருக்கும் பாதி பேர் புத்திசாலிகள் என்பதை ஒப்புக்கொள்கிறேன்'' என்றார். உடனே அனைவரும் கை தட்டி ஆராவாரம் செய்தனர்.
பார்த்தீர்களா... இவர் சிறந்த பேச்சாளர் என்பது உண்மைதானே. பேச்சாற்றல் குறித்து இவர் சொல்வதை கேளுங்கள்.
'மனிதனிடம் இருக்கும் திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்கு உரியது பேச்சாற்றல். அதை சரியாக கைவரப் பெற்றவர்கள் அரசரை விட அதிகாரம் பெற்றவர்' என்கிறார்.
