ADDED : மார் 27, 2023 12:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம். அவரின் மனைவி மேரி அவரிடம் ''நீண்ட காலத்திற்கு பிறகு ஓர் உண்மை புரிந்தது'' என்றார். என்ன எனக் கேட்க, ''உங்களை விட நிறைய வழக்கறிஞர் அதிகளவு பணத்தை சம்பாத்யம் செய்தார்கள். ஆனால் அவர்களால் உங்களை போல இப்பதவியை அடைய முடியவில்லை. ஆனால் மக்களிடம் நீங்கள் பெற்ற நற்பெயர் தான் இதற்கு காரணம்'' என புரிந்தது. பணத்திற்கு குறிப்பிட்ட அளவு தான் சக்தி உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்'' என்றார் மேரி. பணம் குறிப்பிட்ட அளவு தான் வேலை செய்யும் என்பதை உணர்ந்திருந்த லிங்கன் புன்னகையுடன் மேரி பேசுவதை ரசித்துக் கொண்டே அன்றைய அலுவல் கோப்புகளை பார்வையிட்டார்.