ADDED : மே 27, 2013 02:37 PM
பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கிறார். புத்திசாலி மாணவர்கள் சரியான பதில் சொல்கின்றனர். சிலர் ஒன்றும் தெரியாமல் விழிக்கின்றனர். இதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவும், பயமும் தான்! இந்த பூமியில் வாழும்போது வேண்டுமானால் நாம் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பி விடலாம்.
ஆனால், என்றாவது ஒருநாள் நாம் தேவனின் முன்னால் செல்வோம். அவர் நம்மிடம் பல கேள்விகளைக் கேட்பார்.
''நீ படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை. மனதில் திட சிந்தனையை வளர்த்துக்கொள்ள நீ பைபிளைப் படிக்கவில்லை. 'பயப்படாதே... நான் உங்கள் அருகில் இருக்கிறேன்' என்று நான் சொல்லியதை நீ செவி மடுக்கவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்,'' என கேட்கும் போது, நாம் வாய்மூடி மவுனியாக இருக்க முடியாது.
நம்மிடம் பல கேள்விகள் கேட்டு பதில் பெற்ற பிறகே, தேவன் நமக்கு ஆசிர்வாதம் அளிப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.