sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

பாசமாய் இருப்போமே!

/

பாசமாய் இருப்போமே!

பாசமாய் இருப்போமே!

பாசமாய் இருப்போமே!


ADDED : அக் 06, 2014 02:58 PM

Google News

ADDED : அக் 06, 2014 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார். ஒருசமயம் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது.

சுற்றுலாக்குழு ஒன்றுடன் சேர்ந்து, அவர் ஒரு பூங்காவில் குதூகலமாக கிறிஸ்தவப் பாடல்களைப் பாடிக் கொண்டும், பொட்டலங்களைப் பிரித்து ஒருவருக்கொருவர் உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தார். அந்தக்குழுவினர் தங்கியிருந்த இடத்திலிருந்து, சற்று தொலைவில் ஒரு குன்று இருந்தது.

அந்த குன்றின் மேல், பார்வையற்ற பலர் வரிசையாக ஏறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு ஏறியவர்களில் முதல் நபர், ஒரு செங்குத்தான பாறையில் கால் வைக்க தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும், இவ்வாறே ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து மடிந்து கொண்டிருந்தனர்.

தன் கண் முன்பாக நடந்து கொண்டிருந்த இந்தக் கோரக் காட்சியைக் கண்ட அம்மையார் அதிர்ந்தார். ஆனால், அதிக இடைவெளி இருந்ததால், அவரால் அங்குள்ள ஆபத்து பற்றி சொல்லி அந்த பார்வையற்றவர்களைத் தடுக்க முடியவில்லை. அம்மையாருடன் வந்த சுற்றுலாக்குழுவினரோ, இதுபற்றி கவலைப்படாமல், தங்களுக்குள் பேசிக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இயேசுகிறிஸ்து, ஏமி கார்மைக்கேல் அம்மையாரை நோக்கி, ''எண்ணற்றவர்கள்

நரக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது, நீயோ சுகபோகமாய் வாழ விரும்புகிறாயே!'' என்று கேட்க, அம்மையார் தன் இருதயம் முழுவதையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்.

இந்த தரிசனம் மூலம் உணர்வடைந்த அம்மையார் தென்தமிழகம் வந்து ஆண்டவருக்குத் தொண்டாற்றினார்கள். மற்றவர்களின் கஷ்டம் பற்றி மக்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்கள் சுகத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இந்த நிலையை பைபிள் வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதோ! அந்த வசனங்கள்.

* கடைசி நாட்களில் ஜனங்கள் சுகபோக பிரியராக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க வேண்டும். (2 தீமோ 3: 4)

* சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்''(1 தீமோ5:4).

* ''மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். (நீதி1:32)

* சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ,''. (அமோ.6:1)

சுயநலம், சுகபோகம், நிர்விசாரம், பெருமை, ஆடம்பரம் போன்றவற்றை தேவன் எதிர்த்து நிற்கிறார். சுயநல வெறி மனிதர்களுக்கு இருக்கக் கூடாது. மற்ற ஜனங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். வறுமையில் துவண்டு போனவர்களுக்கும், பணமிருந்தும் நிம்மதியற்றவர்களுக்கும் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்து நேசக்கரம் நீட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us