sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி!

/

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி!

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி!

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி!


ADDED : செப் 16, 2014 04:43 PM

Google News

ADDED : செப் 16, 2014 04:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார்.

இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் மலையில், ஒரு சிறிய திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை ஒரு குடும்பத்துக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகள் 'சூலமித்தி'. மிகவும் அழகானவள்.

சூலமித்தியாளின் சகோதரர்கள் அவள் அழகாக இருக்கிறாளே என்று அவள் மேல் பொறாமை கொண்டு, சாலமோனின் திராட்சைத் தோட்டத்தை பகலில் காவல் காக்கும் வேலையை அவளிடம் கொடுத்தனர். வெயிலில் வேலை செய்தால் அவள் கருத்துப் போவாள் என்பது அவர்களது திட்டம். ஆனால், அவ்வாறு வேலை செய்த நிலையிலும் கூட, அவளுடைய கண்கள் புறாக்களின் கண்களைப் போல சாந்தமாக இருந்தன. கூந்தல் சுருண்டு அழகாக இருந்தது. பற்கள் வெண்மையாய் ஒளிர்ந்தன. தோட்டத்திலுள்ள லீலி புஷ்பம் போலவும், அழகான நீருற்றைப் போலவும் இருந்தாள்.

நிறம் கருத்தாலும், அவள் தன் வேலையை விடவில்லை. அந்த திராட்சைத் தோட்டத்தை நாசம் செய்கிற குள்ள நரிகளையும், சிறுநரிகளையும் பிடித்தாள்.

சிரமப்பட்டு தோட்டத்தைக் காத்தாள்.

இந்தநிலையில் ஒரு வசனத்தைக் கேளுங்கள்.

''உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்குண்டு பணிந்த

ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்''. ஏசாயா 57:15.

இதன் பொருள் என்ன தெரியுமா?

''யாரொருவர் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் ஏற்று, அவரது கடமையைச் செய்கிறாரோ, அவர்களின் அருகில் ஆண்டவர் இருப்பார்'' என்பது தான்.

இந்த வசனத்திற்கேற்ப, ராஜா சாலமோன், ஒருநாள் திராட்சைத் தோட்டத்திற்கு வந்து சூலமித்தியாளைச் சந்தித்தார். அனைத்து வேலைகளையும் உற்சாகமாகச் செய்யும் அந்தப் பெண்ணைப் பார்த்தார். மற்றவர்களின் வஞ்சகப்பேச்சாலும், செய்கைகளாலும் நொறுங்கிப் போன இருதயத்தைக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு அரண்மனையில் உயர்ந்த பதவி தர முடிவெடுத்தார்.

ஆம்...அவளது பொறுப்பான வேலை, அவள் உயர்பதவிக்கு செல்ல வழி வகுத்தது.

இவ்வுலகில் நாம் கடவுளின் பிள்ளைகளாக, உண்மையாக, உற்சாகமாக வேலைகளைச் செய்வோம். தாழ்மையாகப் பணிபுரிந்து, நொறுங்குண்ட இருதயத்தோடு, பணிந்த ஆவியுள்ளவர்களாக இருக்கும்போது, நம்மைப் படைத்த ஆண்டவர் நம்மிடத்தில் வாசம் பண்ணுகிறேன் என்று வருகிறார். இதை விட பேரானந்தம் இந்த உலகில் வேறு எது இருக்க முடியும்?






      Dinamalar
      Follow us