ADDED : அக் 20, 2020 03:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகத்தில் பிரச்னை உண்டு. ஆனாலும் திடமுடன் இருங்கள். துணிவுடன் சமாளியுங்கள்
* உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருக்கட்டும்.
* சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
* மற்றவர்கள் முன் நீதிமான்களாக நீங்கள் காட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆண்டவர் உங்களை அறிந்திருக்கிறார்.
* குடும்ப கவலைகளால் பாரம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.
* மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* செல்வத்தை விட நல்லவன் என்னும் பெயர் சிறந்தது.
- பைபிள்

