sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நரைத்த தலையா... கவலைப்படாதீங்க!

/

நரைத்த தலையா... கவலைப்படாதீங்க!

நரைத்த தலையா... கவலைப்படாதீங்க!

நரைத்த தலையா... கவலைப்படாதீங்க!


ADDED : டிச 01, 2015 11:09 AM

Google News

ADDED : டிச 01, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைபிள் பல பயனுள்ள போதனைகளை மனிதகுலத்துக்கு அறிவிக்கிறது. இதோ, படியுங்கள்.

* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம்; கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.

* மனிதர்கள் தங்களுக்கு மேற்பட்ட வேறொருவரை குறிப்பிட்டுக் கூறி சத்தியம் செய்கிறார்கள். எவ்விதமான பிரச்னையையும் முடிப்பதற்கு சத்தியம் செய்வதே உறுதுணையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், ஒரு ரோமத்தையேனும் வெள்ளையாகவோ, கறுப்பாகவோ உங்களால் மாற்றமுடியாது. எதற்காகவும் சத்தியம் செய்ய வேண்டாம். பரலோகத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்ல வேண்டாம். ஏனெனில், அது பரமபிதாவின் சிம்மாசனம். பூமியின் மீதும் ஆணையிட வேண்டாம். ஏனெனில், அது அவரது பாதபீடத்தில் இருக்கிறது.

* கத்தியை எடுப்பவர்கள் எல்லாம் அந்த கத்தியாலேயே மடிந்துபோவார்கள்.

* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாக எழுந்திருக்கும். அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிக்க முடியாது.

* மண் மண்ணுக்குள் திரும்பிப்போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.

* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கும்.

* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய முடியாது.

* மாபெரும் மனிதர்கள் அனைவருமே அறிஞர்களாக இருந்து விடுவதில்லை.

* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது மிகவும் சிறந்தது. ஏனெனில், அறிவுள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான்.

* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால் அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருளாகும்.

* உங்களை நிந்தித்து துன்புறுத்துபவர்களும், பழி தூற்றுபவர்களும் உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்களை நேசிப்பவர்களையே நீங்கள் நேசிப்பதாயின், அதில் வெகுமானம் எதுவுமில்லை.

* பலமும், மானமுமே ஒரு பெண்ணின் ஆடைகள். உன் ஆடைகள் எப்பொழுதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.






      Dinamalar
      Follow us