sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

/

திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்


ADDED : மார் 25, 2011 02:03 PM

Google News

ADDED : மார் 25, 2011 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சகோதரரே! நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை, தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்''(1கொரி.1:26,27) என்று ஒரு வசனம் இருக்கிறது.

இதன்பொருள் என்ன?

ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார். அவர்களையே நேசிப்பார் என்ற தப்புக்கணக்கு பலரிடமும் இருக்கிறது. அப்படி அவர் நினைத்திருப்பாரேயானால்

இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று சிந்தியுங்கள்.

* கர்த்தர் மோசேயைத் தெரிந்துö காண்ட போது, மோசே தன்னுடைய இயலாமையை ஆண்டவரிடத்தில் விவரித்து, ''நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்,'' என்றார். ஆனால், கர்த்தர் மோசேயைக் கொண்டு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் நாற்பது ஆண்டுகள் வழிநடத்த வல்லவராய் இருந்தார்.

* கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்த போது, எரேமியா தன்னைத் தாழ்த்தி சொன்னது என்ன தெரியுமா? ஆ...கர்த்தராகிய ஆண்டவரே! இதோ! நான் பேச அறியேன். சிறுபிள்ளையாய் இருக்கிறேன்,'' என்றார். எனினும், கர்த்தர் தம் வார்த்தைகளை எரேமியாவின் வாயில் தந்து, தீர்க்கதரிசியாக்கி வல்லமையாகப் பயன்படுத்தினார்.

* கர்த்தர் பேதுருவை அழைத்தபோது மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். படிப்பறிவு இல்லாத பேதுரு, ''ஆண்டவரே! நான் பாவியான மனுஷன் என்னை விட்டுப் போய்விடும்,'' என்றார். ஆனால், கர்த்தரோ பேதுருவை சீஷனாக்கி, ஆவிக்குரிய வரங்களைத் தந்து மாபெரும் அப்போஸ்தலக்கினார்.

* மெதடிஸ்ட் ஆலயங்களை எல்லாம் நிறுவின ஜான்வெஸ்லி குள்ளமாய் இருந்தார். மற்றவர்களால் கேலி செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும், கர்த்தரோ அவரை அக்னி ஜுவாலையாய் வல்லமையாய் பயன்படுத்தினார்.

* போதகர் டி.எல்.மூடி படிப்பறிவு இல்லாதவர். அவர் பேசும் ஆங்கிலத்தை அநேகர் கேலி செய்வதுண்டு. என்றாலும், அவருடைய ஊழியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இன்றைக்கும் கிறிஸ்தவ சரித்திரத்தில் அவருக்கு நீங்காத இடமுண்டு.

* கொரியாவின் பால்யாங்கிசோ, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர். சயரோகத்தினால் பாதிக்கப்பட்டு ஒடுங்கிப்போய் இருந்தார். இருமி இருமி இளைத்து துரும்பானார். ஆனால், கர்த்தர் அவரை உயர்த்தி தெய்வீக மனுஷனாய் ஆசிர்வதித்தார்.

எனவே, தேவகுழந்தைகளான நாம், சாதாரண நிலையில் இருக்கிறோமே என வருந்தத் தேவையில்லை. கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால், அவர் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வார். நம்மைக் கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றுவார்.






      Dinamalar
      Follow us