sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அன்புடன் தந்த காணிக்கை

/

அன்புடன் தந்த காணிக்கை

அன்புடன் தந்த காணிக்கை

அன்புடன் தந்த காணிக்கை


ADDED : ஜூலை 17, 2010 03:45 AM

Google News

ADDED : ஜூலை 17, 2010 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புடன் தந்த காணிக்கை



போதகர் ஒருவர்,



இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட இலவச துண்டு பிரதிகளை வினியோகம் செய்து கொண்டிருந்தார். அதை சிலர்பயபக்தியுடன் வாங்கிச் சென்றனர். இன்னும் சிலர் அசட்டையாக வாங்கினர். ஒரு



சிறுவனுக்கு பத்து வயதிருக்கும். அவன் அந்த துண்டு பிரதிகளில் சில வேண்டுமென்று கேட்டான்.



அழுக்கடைந்த உடை அணிந்திருந்தான். அவனது ஏழ்மையை அவனது சரீரமே வெளிப்படுத்தியது. போதகரும் அவன் கேட்ட சில பிரதிகளைக் கொடுத்தார். அதை பணிவுடன் வாங்கிக் கொண்டான். சற்று தூரம் சென்று அமர்ந்து அவற்றை வாசிக்க ஆரம்பித் தான். பிரதிகளை விநியோகித்தபடியே, அவன் என்ன



செய்கிறான் என்பதையும் போதகர் கவனித்துக் கொண்டே இருந்தார். எங்கும் திரும்பாமல், அவன்



கவனமாகபடித்தான். வாசித்து முடித்ததும், அவன் போதகரிடம் மீண்டும் வந்தான்.அவனிடம் ஒரு கந்தல் மூடை இருந்தது. அதைப் பிரித்து ஏதோ ஒரு தாளை எடுத்தான். அது பதினாறு மடிப்பாக இருந்தது. அதை போதகரிடம் கொடுத்து,'' ஐயா! இயேசுவுக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இதை வைத்துக் கொள்ளுங்கள். என்னிடத்தில் இருப்பது இவ்வளவு தான்,'' என்றான். போதகர் அதை வாங்கிப் பார்த்தார். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. அவனுடைய வறுமையைப் பார்த்த போதகருக்கு அதை வாங்க மனமே இல்லை. கண்ணீர் துளிர்த்தது. அதைக் திருப்பிக் கொடுப்பதற்காக கையை நீட்ட இருந்த வேளையில்,''இதை அவன் எனக்கு காணிக்கையாகக் கொடுக்கவில்லை. இயேசுவுக்கு கொடுக்கிறான். அப்படியானால், இதை மறுக்கும் உரிமை எனக் கில்லை. ஆண்டவரே! இந்தச் சிறுவன் தரும் பணத்தை, உம்முடைய காயம்பட்ட கரங்களே வாங்கிக் கொள்ளட்டும். நீர் அவனைஆசிர்வதிக்க வேண்டும்,'' என்று உள்ளம் உருகி ஜெபித்து வாங்கிக் கொண்டார். அந்தச்சிறுவனை ஒரு தேவதூதனாகவும், பரிசுத்தவானாகவும், வல்லமையுள்ள



ஊழியக்காரனாகவும் நினைத்துக் கொண்டார்.



ஆலய கீதம்



பைபிள் பொன்மொழிகள்



* ஆண்டவர் மேல் உன் கவலையை போட்டுவிடு, அவர் உனக்கு ஆதரவளிப்பார்.



* ஈகை குணம் உள்ளோர், வளம் பெற வாழ்வர். குடிநீர் கொடுப்போர் , குடி நீர் பெறுவர்.



* நெஞ்சே! கடவுளுக்காக மவுனமாய் காத்திரு. எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.



* உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.



* தான் வெட்டின குழியில் தானே விழுவர். தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.








      Dinamalar
      Follow us