sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

புதியதோர் உலகம் செய்வோம்

/

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்


ADDED : ஏப் 02, 2021 03:56 PM

Google News

ADDED : ஏப் 02, 2021 03:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று புனித வெள்ளி

இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அவர் இறந்த நாளுக்கு முன்புள்ள 40 நாட்கள் 'தவக்காலம்' எனப்படும். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் உபவாசம் மேற்கொண்டு. ஆடம்பரம், அலங்காரத்தை தவிர்ப்பர். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்த மாட்டார்கள். ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வர்.

இயேசு பிறப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் எனப்படும். பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. பாவம் செய்த மனிதன் பரிகாரம் தேடி ஒரு ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுப்பான். அந்த ஆட்டை பலிபீடத்திற்கு எடுத்து வந்து, அதன் மீது கைகளை வைத்து தனது பாவங்களை அறிக்கையிடுவான். மதகுரு அந்த ஆட்டை பலிபீடத்தின் மீது கிடத்தி பலி கொடுப்பார். அதன் ரத்தத்தை பாவம் அறிக்கையிட்ட மனிதன் மீது தெளித்து ' இந்த ஆடு மரித்ததன் மூலம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' எனக் கூறுவார்.

அந்த வகையில் இயேசு பாவங்களைச் சுமந்து தீர்க்கிற 'தேவ ஆட்டுக்குட்டி' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்களின் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே மதவிரோதமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தினர். மக்களை தங்களின் வழிக்கு கொண்டுவர அவரைக் கொல்லும் முடிவுக்கு வந்தனர். பலி ஆடாக இயேசு பாவங்களை ஏற்று தனது ஜீவநாடகத்தை முடித்தார்.






      Dinamalar
      Follow us