நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் சேர்ப்பது தவறல்ல அதை சேர்க்கும் முறையும் சரியானதாக இருக்க வேண்டும்.
* சுலபமாக சேர்த்த பணம் விரைவில் அழியும். ஆனால் உழைப்பின் மூலம் பணம் தேடுபவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.
* பொய் சொல்லித் திரட்டிய பணம் சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான செயலாகும்.
* பணத்தால் கிடைத்த ஆட்சியும், அதிகாரமும் தலைமுறை தலைமுறையாக நிலைப்பதில்லை.
* யார் வாரிசு எனத் தெரியாமலேயே அநியாயமாக செல்வத்தைக் குவிக்காதீர்.
* புல்லின் மீது சூரியஒளி பட்டதும் பனி உலர்கிறது. அது போல ஆணவத்தால் பணக்காரனின் செல்வமும் அழியும்.

