ADDED : பிப் 13, 2021 03:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஊக்கமுடன் செயல்பட உற்சாகமே நல்ல மருந்து.
* மனதில் மகிழ்ச்சி இருந்தால் முகத்தில் மலர்ச்சி இருக்கும்.
* விசுவாசத்தைக் கடைபிடித்து மனசாட்சியுடன் வாழுங்கள்.
* செயல்களில் ஈடுபடும் மனிதனுக்கே சமூகத்தில் மதிப்பு உயரும்.
* உங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழப் பழகுங்கள்.
* வயதானவரை அவமதிக்காதீர். அவர்களை பரிவுடன் நடத்துங்கள்.
* பெண்களின் ஆதரவின்றி உலகில் வாழ முடியாது.
* பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுங்கள்.
* ஏழைகள் பேறு பெற்றவர்கள்; ஏனெனில் வானுலகம் அவர்களுக்கானது.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கும் ஆசீர்வாதம் கூறுங்கள்.
* புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நன்மை தராது.
- பொன்மொழிகள்

