/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கட்டுரைகள்
/
அஸ்திவாரமும் அச்சாணியும் இதுவே!
/
அஸ்திவாரமும் அச்சாணியும் இதுவே!
ADDED : செப் 10, 2010 03:24 PM

ஒரு இளைஞனுக்கு பல நண்பர்கள் இருந்தனர். இளைஞனுக்கு ஆண்டவரின் மீது தீவிரமான பக்தியுண்டு. நண்பர்கள் எல்லாருமே நாத்திகர்கள். ஆனால், அவர்கள் எல்லாருமே தலைசிறந்த எழுத்தாளர்கள். தேவன் என்ற ஒருவரே பூமியில் இல்லை என்ற தங்களது வாதத்தை வலியுறுத்தி பல புத்தகங்களையும் அவர் எழுதியிருந்தார்கள். மக்களும் அவற்றை விரும்பி வாங்கிப் படித்தார்கள். இதனால், புகழும், வருமானம் பெருகி அவர்கள் தலைகால் புரியாமல் குதித்தனர். அவர்கள், தேவனின் மேல் நம்பிக்கையுடைய இளைஞனுடன் தர்க்கவாதம் புரிவார்கள். ''ஆண்டவர் எங்கிருக்கிறார்? இங்கே வரச்சொல், பார்க்கலாம்,'' என்று கேலி செய்யும் தொனியில் பேசுவார்கள்.ஒருமுறை, அவர்கள் தாங்கள் எழுதிய பத்து, பதினைந்து புத்தகங்களை ஒரு மேஜையில் அடுக்கி வைத்திருந்தார்கள். வெளியில் இருந்து வந்த இளைஞர், அவற்றின் மீது தான் கொண்டு வந்த பைபிளை வைத்தார். இதைப் பார்த்த ஒரு நண்பனுக்கே வந்ததே ஆத்திரம். வேகமாக வந்து, பைபிளை எடுத்து தங்கள் புத்தகங்களுக்கு அடியில் தூக்கி வைத்தான். இளைஞன் சிரித்தான்.''நண்பனே! நீ செய்தது சரிதான். பைபிள் தான் எல்லா புத்தகங்களுக்கும் அஸ்திவாரமாக இருக்கிறது என்று நீ சொல்லாமல் சொல்கிறாய் போலும்,'' என்றான்.இதைக் கேட்ட இன்னொரு நண்பன் ஓடிவந்தான். பைபிளை எடுத்து புத்தகங்களின் நடுவில் வைத்தான்.இளைஞன் முன்னை விட அதிகமாக சிரித்தபடி,''நண்பர்களே! பைபிள் தான் எல்லா புத்தகங்களுக்கும் அச்சாணி என்கிறாயோ!'' என்றான்.அவர்களால் அதற்கு மேல் எதுவும் வாய்திறந்து பேசமுடியவில்லை. அங்கிருந்து அகன்று விட்டனர்.''கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே,'' (1பேது.1:25).
* நீங்கள் மனிதர்களின் குற்றங்களை மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.* உன் மட்டில் கவனமாயிரு. உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்துவானேயானால் அவனை மன்னித்துவிடு. -பைபிள்