/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கட்டுரைகள்
/
கடவுளை நிந்தித்தால் என்னாகும்?
/
கடவுளை நிந்தித்தால் என்னாகும்?
ADDED : ஜன 29, 2018 09:24 AM

ஆண்டவர் இல்லை என ஒரு கூட்டமும்,. அவரை மிஞ்சி விஞ்ஞானத்தால் சாதிப்பேன் என ஒரு கூட்டமும் நிந்திக்கிறது. இப்படி நிந்திப்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். இதோ! பைபிள் சொல்வதை கேளுங்கள்.
* ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என்கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன். (அதாவது உலகில் பசி, பட்டினியால் அனைத்து ஜீவ ராசிகளையும் அழிப்பேன்)
* நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்
* நீ என்னை (ஆண்டவரை) விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.
* கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்.
* எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது. அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறது.
கடவுளை நிந்திப்பதால் தான், இயற்கை நம்மை வதைக்கிறது என்பது இந்த வசனங்கள் மூலம் வெளிப்படுகிறது.