/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
கோயில் என்பதும் ஆலயமே! குடும்பம் என்பதும் ஆலயமே!
/
கோயில் என்பதும் ஆலயமே! குடும்பம் என்பதும் ஆலயமே!
ADDED : ஜூலை 15, 2013 12:45 PM

'புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்' (நீதி14:1) என்ற பைபிள் வசனத்தைப் படித்திருப்பீர்கள். இதிலுள்ள 'வீடு' என்ற சொல்லை எபிரேய மூலமொழியில் 'பேயிட்' என்று குறித்திருப்பார்கள். மொழி ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் <<உள்ளன என்கிறார்கள். 'வீட்டைக் கட்டுகிறாள்' என்பது 'வீடு' எனப்படும் கட்டடத்தைக் குறிப்பதல்ல. குடும்பத்தைக் கட்டி எழுப்புவதையே மேற்கண்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், 'வீட்டைக் கட்டுகிறாள்' என்ற பதத்திலுள்ள 'வீடு' என்ற சொல்லுக்கு 'ஆலயம்' என்ற மற்றொரு அர்த்தமும் உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் ''தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்,'' (1கொரி3:17) என்று குறிப்பிடுகிறார். ஆகவே, புத்தியுள்ள ஸ்திரீ குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறாள் என்பது மாத்திரமல்ல, குடும்பத்திலுள்ள
ஒவ்வொருரையும் தேவனுடைய ஆலயமாகக் கட்டி எழுப்புகிறாள் என்ற இரு அர்த்தமும் பொதிந்ததாக இருக்கிறது.
பெண்கள் தங்கள் குடும்பத்தை கோயில் போல் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பிலுள்ளதை இந்த வசனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து