/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்!
/
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்!
ADDED : ஜூலை 24, 2013 11:35 AM

டாக்டர் பில்லிகிரஹாம், மினெசோட்டா நகரில் உரையாற்றினார். ஆவிக்குரிய பெரும் சரிவைக் குறிப்பிடும் போது, அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தருவதாய் இருந்தன.
அமெரிக்காவில் எட்டு மில்லியன் மக்கள் (80 லட்சம் பேர்)போதைக்கு அடிமைப் பட்டிருக்கிறார்கள். 5 லட்சம் டீன் ஏஜ் பெண்கள் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் உயர்நிலைப்பள்ளி பிள்ளைகள் ஒழுக்கம் தவறி குழந்தை பெற்றிருக்கிறார்கள் என்பது அவர் தந்த அதிர்ச்சி தகவல்கள்.
இந்த புள்ளிவிபரம் 40 ஆண்டுகளுக்கு முந்தையது. 1961, மே27 சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் இதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அன்றே இப்படி என்றால், இப்போது எத்தனை மடங்கு என்று சொல்லத் தேவையில்லை.
பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
''நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.... உங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார்'' (எசே33:11) என ஆண்டவர் தன்னிடம் திரும்பும்படி அன்பாய் அழைத்துக்கொண்டே இருக்கிறார்.
ஆம்...தப்பு செய்பவர்கள் திருந்தியாக வேண்டும். இப்போது, நமது நாட்டிலும் இதுபோன்ற பாலியல் தவறுகள் பெருகி விட்டன. ஆண்டவரின் கருத்தை ஏற்று மனம் திரும்பினால் தான் மறுமலர்ச்சி உண்டாகும்.