நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னேற விரும்பினால் மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் மற்றவர் பெருமையாக பேச வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர்க்கிறார்கள். நடுநிலையாளர்களின் விமர்சனத்தை கூட ஏற்பதில்லை. பிறரிடம் உள்ள நல்லதை ஏற்கும் பக்குவம் வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும், புதிய விஷயங்களில் ஆர்வம் கொள்வதும் வளர்ச்சிக்கு அவசியம். ' நான் கற்றது கொஞ்சமே... கற்க வேண்டியது ஏராளம்' என நினைப்பவன் தானும் உயர்ந்து மற்றவரையும் உயர்த்துகிறான்.